ஐ.பி.எல்.(IPL)

நான் ஆதரவு தெரிவித்தால் ஆப்புதான்.. இந்தமுறை இந்த அணிக்குதான் ஆதரவு- சேவாக் நக்கல்

Published On 2025-06-03 16:10 IST   |   Update On 2025-06-03 16:10:00 IST
  • குவாலிஃபயர் 1 போட்டியின்போது பஞ்சாபை ஆதரித்தேன். அது தோற்றது.
  • எலிமினேட்டரில் குஜராத்தை ஆதரித்தேன். அதுவும் தோற்றது.

18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. ஐ.பி.எல். கோப்பையை வெல்வதற்கான இந்த போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதுவரை சாம்பியன் பட்டம் பெறாத அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. இதனால் முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்ல போவது பெங்களூரா? பஞ்சாப்பா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.சி.பி. 4-வது தடவையாகவும், பஞ்சாப் 2-வது முறையாகவும் இறுதிப் போட்டியில் ஆடுகின்றன.

இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உங்கள் ஆதரவு எந்த அணிக்கு என இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவாக்கிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சேவாக் கூறியதாவது:-

குவாலிஃபயர் 1 போட்டியின் போது பஞ்சாபை ஆதரித்தேன். அது தோற்றது. எலிமினேட்டரில் குஜராத்தை ஆதரித்தேன். அதுவும் தோற்றது. குவாலிஃபயர் 2 போட்டியில் மும்பையை ஆதரித்தேன். அதுவும் தோற்றது. நான் சர்வதேச போட்டிகளில் இந்திய அணியை ஆதரித்தாலும் அப்பொழுதும் தோல்விதான் மிஞ்சுகிறது. இப்போது ஆர்சிபியை ஆதரிக்கிறேன் என சிரித்தபடி கூறியுள்ளார்.

அவர் ஆர்சிபி அணிக்கு ஆதரவு தெரிவிப்பதால் ஆர்சிபி அணியும் தோல்வியடைந்து விடும் என அவர் மறைமுகமாக கூறியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

Tags:    

Similar News