IPL 2025: 14 வயதில் அதிவேக சதம்... அடுத்த போட்டியில் டக் அவுட் ஆன வைபவ் சூர்யவன்ஷி
- 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
- ராஜஸ்தான் அணிக்கு 218 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை.
18-வது ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் - ரிக்கல்டன் களம் இறங்கினர்.
நிதானமாக விளையாடிய ரோகித் - ரிக்கல்டன் ஜோடி 100 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்தது. அதிரடியாக விளையாடிய ரிக்கல்டன் 61 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரோகித் 53 ரன்கள் அடித்து அவுட்டானார்.
அடுத்ததாக சூரியகுமார் - ஹர்திக் பாண்ட்யா ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய பாண்ட்யா 48 ரன்களும் சூரியகுமார்42 ரன்களும் அடித்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் பராக், தீக்சனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையது ராஜஸ்தான் அணியில் வைபவ் சூரியவன்ஷி - ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரிலேயே வைபவ் சூர்யவன்ஷி டக் அவுட்டாகி வெளியேறினார்.
14 வயதே ஆனா வைபவ் சூர்யவன்ஷி குஜராத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 35 பந்துகளில் அதிவேக சதம் அடித்து அசத்தினார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்த போட்டியிலேயே வைபவ் சூர்யவன்ஷி டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார்.