ஆர்.சி.பி. அணிக்கே எனது ஆதரவு: இறுதிப்போட்டியை கண்டுகளிக்கும் பிரிட்டன் முன்னாள் பிரதமர்
- ஐ.பி.எல். இறுதிப்போட்டியைக் காண பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் அகமதாபாத் வந்தார்.
- பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில் இருந்தபடி ஆர்சிபி அணிக்கு அவர் உற்சாகம் கொடுத்தார்.
அகமதாபாத்:
ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியைக் காண பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் அகமதாபாத் வந்துள்ளார். மைதானத்தில் இருந்தபடி ஆர்சிபி அணிக்கு அவர் உற்சாகம் கொடுத்தார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய ரிஷி சுனக் கூறியதாவது:
லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை இடம்பெற செய்ததில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டை மாற்றம் காண செய்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் இதில் விளையாட வேண்டும் என விரும்புகின்றனர். மகளிரையும் இதில் ஈடுபட செய்யும் வகையில் மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடத்தப்படுகிறது. அது வரவேற்கத்தக்கது.
நான் விராட் கோலியின் மிகப் பெரிய ரசிகர். அவர் ஒரு ஜாம்பவான். நான் பிரிட்டன் பிரதமராக இருந்தபோது கோலி ஆட்டோகிராப் உடன் கூடிய பேட் ஒன்றை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தீபாவளி பரிசாக அளித்தார்.
இங்கிலாந்துக்கு இந்தியா கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அது சிறப்பான தொடராக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
நான் பெங்களூருவை சேர்ந்த குடும்பத்தில் இருந்து பெண் எடுத்துள்ளேன். அதனால் ஆர்சிபி அணிக்கு தான் எனது ஆதரவு என தெரிவித்தார்.