ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் தொடரில் இருந்து சன்ரைசர்ஸ் வீரர் விலகல்- மாற்று வீரர் அறிவிப்பு

Published On 2025-05-05 18:29 IST   |   Update On 2025-05-05 18:29:00 IST
  • பயிற்சியின் போது ஸ்மாறன் ரவிச்சந்திரன் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
  • மாற்று வீரராக ஆல் ரவுண்டர் ஹர்ஷ் தூபேவை சன்ரைசர்ஸ் அணி ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இத்தொடரில் இன்று நடைபெறும் 55-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடக்கவுள்ளது.

இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஆல் ரவுண்டர் ஸ்மாறன் ரவிச்சந்திரன் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஆடம் ஜாம்பா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில் ஸ்மாறன் ரவிச்சந்திரன் மாற்று வீரர்காக தேர்வுசெய்யப்பட்டார்.

பயிற்சியின் போது ஸ்மாறன் ரவிச்சந்திரன் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறியதை அடுத்து அவருக்கு பதிலாக, உள்ளூர் போட்டிகளில் விதர்பா அணிக்காக விளையாடி வரும் ஆல் ரவுண்டர் ஹர்ஷ் தூபேவை சன்ரைசர்ஸ் அணி ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஹர்ஷ் தூபே இதுவரை 16 டி20, 20 லிஸ்ட் ஏ மற்றும் 18 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பந்துவீச்சில் 127 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 941 ரன்களையும் சேர்த்து அசத்தியுள்ளார். 

Tags:    

Similar News