ரிஷப் பண்ட் ரன்களை குவிக்காமல் இருக்கலாம், ஆனால்... சுனில் கவாஸ்கர் புகழாரம்
- மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் ரிஷப் பண்ட் மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இப்போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், "ரிஷப் பண்ட் ரன்களை குவிக்காமல் இருக்கலாம். ஆனால் ஒரு கேப்டனாக அவர் தங்கத்திற்கு நிகரானவர்" என்று புகழாரம் சூட்டினார்.
இந்த போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் அவரது தடுமாற்றம் தொடர்கிறது. இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் ரிஷப் பண்ட் மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.