ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் தொடரில் 3 அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்ற ஒரே கேப்டன்!

Published On 2025-06-02 07:06 IST   |   Update On 2025-06-02 07:06:00 IST
  • 2024 ஆம் ஆண்டு ஸ்ரேயஸ் தலைமையிலான கொல்கத்தா அணி கோப்பையை வென்றது
  • வேறு எந்த வீரரும் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றதில்லை.

ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.

அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றதன் மூலம் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்குள் அழைத்து சென்ற ஒரே கேப்டன் என்ற மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு டெல்லி அணியையும், 2024ம் ஆண்டு கொல்கத்தா அணியையும், நடப்பு சீசனில் பஞ்சாப் அணியையும் ஸ்ரேயஸ் இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் தொடர்ச்சியான 2 ஐபிஎல் சீசன்களில் இரண்டு வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்ற ஒரே வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். வேறு எந்த வீரரும் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றதில்லை.

இதில், 2024 ஆம் ஆண்டு ஸ்ரேயஸ் தலைமையிலான கொல்கத்தா அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News