ஐ.பி.எல்.(IPL)

ஒருவேளை இருக்குமோ... ஷர்துல் தாகூருக்கு பதில் அர்ஜுன் டெண்டுல்கர்?: MI - LSG பேச்சுவார்த்தை

Published On 2025-11-12 21:37 IST   |   Update On 2025-11-12 21:37:00 IST
  • தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
  • அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது.

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததால் அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மும்பை அணி நிர்வாகம் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூரை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவாார்த்தை நடத்தி வருவதாக முன்னாள் சி.எஸ்.கே. வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

அவருக்கு பதிலாக தனக்கு அணியின் அர்ஜுன் டெண்டுல்கரை லக்னோ அணிக்கு கொடுக்க மும்பை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷர்துல் தாகூருக்கு பதில் அர்ஜுன் டெண்டுல்கரா? என்று இந்த தகவலை நெட்டிசன்கள் இணையத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.

Tags:    

Similar News