ஐ.பி.எல்.(IPL)

RCB அணிக்கு வந்த சோதனை... காயம் காரணமாக ஜோஷ் ஹேசில்வுட் விலகல்?

Published On 2025-05-12 06:44 IST   |   Update On 2025-05-12 06:44:00 IST
  • தோள்பட்டை வலியால் ஆர்.சி.பி. வீரர் ஜோஷ் ஹேசில்வுட் அவதிப்பட்டு வருகிறார்.
  • ஐபிஎல் தொடர் வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளதாக தகவல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தை தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மேலும், ஐபிஎல் தொடரை மீண்டும் தொடங்குவதற்காக சொந்த ஊர் திரும்பிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை மீண்டும் அழைக்கும் பணியில் அந்ததந்த அணி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வரும் ஆர்.சி.பி. அணியின் முக்கிய வீரரான ஜோஷ் ஹேசில்வுட் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பாக சரியான நேரத்தில் குணமடைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News