ஐ.பி.எல்.(IPL)

IPL இறுதிப் போட்டியில் RCB அணியின் முக்கிய வீரர் ஒருவர் விளையாடுவது சந்தேகம்!

Published On 2025-06-03 10:52 IST   |   Update On 2025-06-03 10:52:00 IST
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
  • இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியின் தொடக்க வீரரான பில் சால்ட் விளையாடுவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பில் சால்ட்டின் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். விரைவில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இறுதிப்போட்டிக்கான பயிற்சியில் பில் சால்ட் ஈடுபடவில்லை. ஆதலால் அவர் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.

குவாலியையார் 1 போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக அரைசதம் அடித்து பெங்களூரு அணியை வெற்றி பெற வைத்த பில் சால்ட் இறுதிப்போட்டியில் விளையாடவில்லை என்றால் அது ஆர்.சி.பி. அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக ஆர்.சி.பி. அணி தரப்பில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

Tags:    

Similar News