ஐ.பி.எல்.(IPL)
குறுக்கிட்டது மழை..! தகுதிச்சுற்று 2 ஆட்டம் தொடங்குவதில் தாமதம்
- எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.
- இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று தெரியும்
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி, 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்து வீச்சு தேர்வு செய்தது.
இதனால், முதலாவதாக மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்க இருந்தது.
டாஸ் போடப்பட்ட சில நிமிடங்களில் மழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.