ஐ.பி.எல்.(IPL)
ஐ.பி.எல். புள்ளிப்பட்டியல்: 2வது இடத்துக்கு முன்னேறியது பஞ்சாப் அணி
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
- இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது பஞ்சாப் அணி.
தரம்சாலா:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நேற்று நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 236 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் எழுச்சி பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி அசத்தியது.
முதல் இடத்தில் ஆர்.சி.பி.யும், 3வது இடத்தில் மும்பை இந்தியன்சும், 4வது இடத்தை குஜராத்தும், 5வது இடத்தை டெல்லியும் பிடித்துள்ளது.
லக்னோ அணி 11 போட்டியில் 5 வெற்றி, 6 தோல்வி என 7வது இடத்தில் உள்ளது.