நரேந்திர மோடி மைதானம் என்றாலே தோல்விதான்- தொடரும் மும்பை அணியின் சோகம்
- பஞ்சாப்புக்கு எதிரான தோல்வியின் மூலம் மும்பை இந்த மைதானத்தில் 6-வது தோல்வியை பதிவு செய்துள்ளது.
- நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் அணிக்கு எதிராக 4 போட்டிகளில் மும்பை தோல்வியடைந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 2-ல் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 203 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 200 ரன்களுக்கு மேல் எடுத்தால் மும்பை அணி தோல்வியை சந்தித்தே இல்லை. அந்த சாதனையை நேற்று பஞ்சாப் அணி தகர்த்தது.
இந்நிலையில் இந்த தோல்வியில் மும்பை அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் மும்பை இந்த மைதானத்தில் 6-வது தோல்வியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக குஜராத் அணிக்கு எதிராக 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
2014-ம் ஆண்டிற்கு பிறகு நரேந்திர மோடி ஸ்டேயத்தில் நடந்த போட்டிகளில் மும்பை வெற்றி பெற்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் விவரம்:-
2015 VS ராஜஸ்தான்
2023 VS குஜராத்
2023 VS குஜராத்
2024 VS குஜராத்
2025 VS குஜராத்
2025 VS பஞ்சாப் கிங்ஸ்