ஐ.பி.எல்.(IPL)

தகுதிச்சுற்று 2: பஞ்சாப் கிங்ஸ் அணியை நாளை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ்

Published On 2025-05-31 02:22 IST   |   Update On 2025-05-31 02:22:00 IST
  • ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்று சண்டிகரில் நேற்று நடந்தது.
  • இதில் குஜராத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்.

சண்டிகர்:

நடப்பு ஐ.பி.எல். தொடரில் தற்போது பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சண்டிகரில் நேற்று நடந்த ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய மும்பை 228 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய குஜராத் அணி 208 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி அகமதாபாத்தில் நடக்கும் தகுதிச்சுற்று-2ல் (ஜூன் 1) பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்திக்கிறது.

இதில் வெற்றி பெறும் அணி ஜூன் 3-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News