ஐ.பி.எல்.(IPL)

GT அணியிடம் இருந்து ரூ.2.6 கோடிக்கு ரூதர்போர்டை வாங்கிய MI அணி

Published On 2025-11-13 20:07 IST   |   Update On 2025-11-13 20:07:00 IST
  • அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது
  • தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததால் அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக குஜராத் அணியிடம் இருந்து ரூ.2.6 கோடிக்கு அதிரடி வீரர் ஷெர்பான் ரூதர்போர்ட்-ஐ மும்பை அணி TRADE செய்துள்ளது.

முன்னதாக லக்னோ வீரர் ஷர்துல் தாக்கூரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2 கோடி கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News