DRS சர்ச்சை... ஆட்டத்தை மாற்றிய பிரேவிஸ் விக்கெட் - நடுவரிடம் ஜடேஜா வாக்குவாதம்
- அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 94 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- பிரேவிஸ் LBW முறையில் டக் அவுட்டானார்.
ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 211 ரன்கள் 2 வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
ஒருகட்டத்தில் வெற்றிபெறும் நிலையில் இருந்த சி.எஸ்.கே. அணி இருந்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 94 ரன்னில் ஆட்டமிழந்தார். இதுதான் ஆட்டத்தை ஆர்.சி.பி. பக்கம் கொண்டு வந்தது.
இதற்கடுத்து இறங்கிய பிரேவிஸ் LBW முறையில் டக் அவுட்டானார். இதையடுத்து மற்றொரு முனையில் இருந்த ஜடேஜாவுடன் பிரேவிஸ் ரெவியூ செய்வது தொடர்பாக பேசினார். பின்னர் அவர் ரெவியூ கேட்டபோது, ரெவியூ எடுப்பதற்கான நேரம் முடிந்துவிட்டது என்று நடுவர் கூறினார். இதனால் பிரேவிஸ் மனம் உடைந்தார். இதனால் ஜடேஜா நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் பிரேவிஸ் விக்கெட்டை மறு ஒளிபரப்பு செய்தபோது பந்து லெக் சைடில் சென்று ஸ்டம்புகளைத் தவறவிட்டது தெரியவந்தது. இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் இதனை விமர்சித்து இணையத்தில் பதிவிட்டனர்.