ஐ.பி.எல்.(IPL)
null

சேப்பாக்கத்தில் போட்டி.. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1 லட்சம்- ஏமாறும் ரசிகர்கள்

Published On 2025-03-25 13:00 IST   |   Update On 2025-03-25 13:00:00 IST
  • குறைந்த பட்ச டிக்கெட்டான ரூ. 1700 டிக்கெட்டுகள் ரு.15 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
  • ரூ.7,500 டிக்கெட்டுகள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் வருகிற 28-ந் தேதி மோதுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்து விற்று தீர்ந்ததாக தகவல் வெளியானது.

இதனால் டிக்கெட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள் வேதனையடைந்தனர். மும்பை- சென்னை அணிகளுக்கான ஆட்டத்திற்கும் இதேபோல் தான் உடனே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் சேப்பாக்கத்தில் போட்டி நடைபெற்றால் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் வாங்குவது கடினமாக உள்ளதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். நிர்வாகம் கொடுக்கும் இணையதளத்தின் உள்ளே சென்றாலே 3 லட்சம் பேர் காத்திருப்பதாக மெசெஜ் வருகிறது. காத்திருந்தால் கூட டிக்கெட் பெற இயலவில்லை எனவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சென்னை போட்டிகளின் டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் லட்ச கணக்கில் விற்பனை செய்வதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. குறைந்த பட்ச டிக்கெட்டான ரூ. 1700 டிக்கெட்டுகள் ரு.15 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. ரூ.7,500 டிக்கெட்டுகள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது. இவ்வளவு விலை கொடுத்தும் வாங்கவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

போட்டிக்கான டிக்கெட் வாங்கியவர்கள் எக்ஸ் தளம் மற்றும் வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைதளங்களில் தன்னிடம் டிக்கெட் இருப்பதாகவும் அதனை பெற்றுக் கொள்ள தனது நம்பருக்கு கால் செய்யுங்கள் அல்லது மெசெஜ் செய்யுங்கள் எனவும் தெரிவித்து வருகின்றனர்.


உடனே டிக்கெட்டுக்காக அதனையும் ரசிகர்கள் யோசிக்காமல் செய்கிறனர். இதனால் பெரிய அளவில் ரசிகர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். டிக்கெட் இல்லாமலே தன்னிடம் டிக்கெட் இருப்பதாக கூறி ஏமாற்று வேலையிலும் சிலர் ஈடுபடுகின்றனர். டிக்கெட் வேண்டும் என்ற ஆசையில் முதலில் கேட்டவுடன் பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி விடுகின்றனர். பின்னர் அந்த நம்பரை தொடர்பு கொண்டால் போன் அனைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கிறது.

மேலும் பலர் ஒரு டிக்கெட்டை பல பேருக்கு அனுப்பி வைத்து விட்டு அனைவரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு கடைசியில் டிக்கெட்டை கொடுக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் உஷாரக இருக்க வேண்டும்.

இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News