ஐ.பி.எல்.(IPL)
null
சிஎஸ்கே அணிக்கு எதிராக நாளை களமிறங்குவாரா நடராஜன்? பதிலளித்த குல்தீப் யாதவ்
- சென்னையுடன் மோதும் நாளைய போட்டியில் நடராஜன் விளையாட மாட்டார்.
- அவர் முழுமையாக உடற்தகுதி பெற்றபிறகு, அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
ஐபிஎல் தொடரின் நாளைய 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி அணி வீரர் குல்தீப் யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது இந்த போட்டியில் டெல்லி அணிக்காக தமிழக வீரர் நடராஜன் விளையாடுவரா என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு விளையாடமாட்டார் என்று சக அணி வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் காயம் காரணமாக சென்னையுடன் மோதும் நாளைய போட்டியில் நடராஜன் விளையாட மாட்டார். அவர் முழுமையாக உடற்தகுதி பெற்றபிறகு, அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என நம்புகிறேன் என குல்தீப் யாதவ் கூறினார்.