ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: சுப்மன் கில், பட்லர் அபாரம்- ராஜஸ்தானுக்கு 210 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத் டைட்டன்ஸ்

Published On 2025-04-28 21:18 IST   |   Update On 2025-04-28 21:18:00 IST
  • சுப்மன் கில் 50 பந்தில் பவுண்டரி, 4 சிக்சருடன் 84 ரன்கள் விளாசினார்.
  • ஜாஸ் பட்லர் 26 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

ஐபிஎல் தொடரின் 47ஆவது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.2 ஓவரில் 93 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 30 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து ஜாஸ் பட்லர் களம் இறங்கினார். இவர் களம் இறங்கியதில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுப்மன் கில் 29 பந்தில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 50 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 84 ரன்கள் அடித்தார். கில் ஆட்டமிழக்கும்போது குஜராத் டைட்டன்ஸ் 16.4 ஓவரில் 167 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது குஜராத் டைட்டன்ஸ் 18.4 ஓவரில் 193 ரன்கள் குவித்திருந்தது. 4ஆவது விக்கெட்டுக்கு பட்லர் உடன் டெவாட்டியா ஜோடி சேர்ந்தார்.

கடைசி ஓவரை ஆர்ச்சர் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் 2 ரன் அடித்து பட்லர் 26 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்தார். குஜராத் இந்த ஓவரில் 13 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் அடித்துள்ளது.

Tags:    

Similar News