null
போட்டி 14 ஓவராக குறைப்பு: ஆர்சிபி-க்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு
- புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி 3ஆவது இடத்தில் உள்ளது.
- பஞ்சாப் கிங்ஸ் 4ஆவது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் 2025 சீசனின் 34ஆவது போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சரியாக 7 மணிக்கு சுண்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
சுமார் 8.40 மணியளவில் நின்றது. பின்னர் போட்டி தொடங்குவதற்கான பணிகளை மைதான ஊழியர்கள் மேற்கொண்டனர். பின்னர் மைதானத்தை பார்வையிட்ட நடுவர்கள், 9.30 மணிக்கு டாஸ் சுண்டப்பபடும், 9.45 மணிக்கு போட்டி தொடங்கும். 14 ஓவர் போட்டியாக நடத்தப்படும் என அறிவித்தனர்.
அதன்படி 9.30 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்துவ வீச்சை தேர்வு செய்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:-
பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, புவனேஸ்வர் குமார், ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, யாஷ் தயால்.
பஞ்சாப் கிங்ஸ்:-
பிரியான்ஷ் ஆர்யா, நெகல் வதேரா, ஷ்ரேயாஸ் அய்யர், ஷஷாங்க் சிங், ஜோஷ் இங்லிஸ், ஸ்டோய்னிஸ், மார்கோ யான்சன், ஹர்ப்ரீத் பிரார், பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், சாஹல்.