IPL 2025- ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்
- ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் இழந்து விட்டது.
- பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆப் ரேஸில் உள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 59-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். காயத்தில் இருந்து மீண்ட சஞ்சு சாம்சன் இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.
இப்போட்டியின் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது.
இப்போட்டியில் அதிகபட்சமாக நெஹல் வதோரா 70, ஷஷங் சிங் 59, ஸ்ரேயாஸ் ஐயர் 30 என்கள் எடுத்தனர்.
இதையடுத்து, 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களிமிறங்கியது.
ஆனால் ஆட்டத்தின் முடிவில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்நிலையில், ஐபிஎஸ் தொடர் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியுள்ளது.