ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: மிட்செல் மார்ஷ் அபார சதம்- குஜராத்துக்கு 236 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது லக்னோ

Published On 2025-05-22 21:34 IST   |   Update On 2025-05-22 21:34:00 IST
  • மிட்செல் மார்ஷ் 64 பந்தில் 117 ரன்கள் விளாசினார்.
  • நிக்கோலஸ் பூரன் 27 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஐபிஎல் தொடரின் 64ஆவது போட்டி குஜராத் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.இருவரும் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் லக்னோ பவர்பிளேயான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்று 53 ரன்கள் சேர்த்தது.

அணியின் ஸ்கோர் 9.5 ஓவரில் 91 ரன்னாக இருக்கும்போது மார்கிராம் ஆட்டமிழந்தார். அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். மிட்செல் மார்ஷ் 33 பந்தில் அரைசதம் அடித்தார். லக்னோ அணி 10.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

மிட்செல் மார்ஷ் உடன் பூரனும் சேர்ந்த அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். இதனால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 14.2 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. மிட்செல் மார்ஷ் சிறப்பாக விளையாடி 56 பந்தில் சதம் விளாசினார். மறுமுனையில் பூரன் 23 பந்தில் அரைசதம் விளாசினார்.

17.4 ஓவரில் லக்னோ 200 ரன்னைக் கடந்தது. 18ஆவது ஓவரில் லக்னோ 18 ரன்கள் அடித்தது. 19ஆவது ஓவரை ஆர்ஷத் கான் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் மார்ஷ் ஆட்டமிழந்தார். மார்ஷ் 64 பந்தில் 10 பவுண்டரி, 8 சிக்சருடன் 117 ரன்கள் விளாசினார்.

அடுத்து ரிஷப் பண்ட் களம் இறங்கினார். 19ஆவது ஓவரில் லக்னோ 9 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரை ரபடா வீசினார். இந்த ஓவரில் 14 ரன்கள் அடிக்க லக்னோ 235 ரன்கள் குவித்துள்ளது. நிக்கோலஸ் பூரன் 27 பந்தில் 56 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 6 பந்தில் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Tags:    

Similar News