ஐ.பி.எல்.(IPL)
ஐபிஎல் 2025: MI vs DC - டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு தேர்வு
- டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறுர்கிறது.
- 5 முறை சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தடுமாறி வருகிறது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.
இந்நிலையில் ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் 4 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
5 முறை சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தடுமாறி வருகிறது. 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.