ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: மார்கிராம், நிக்கோலஸ் பூரன் அரைசதம்- குஜராத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ

Published On 2025-04-12 19:29 IST   |   Update On 2025-04-12 19:29:00 IST
  • மார்கிராம் 31 பந்தில் 58 ரன்கள் அடித்தார்.
  • நிக்கோலஸ் பூரன் 34 பந்தில் 61 ரன்கள் விளாசினார்.

ஐபிஎல் 2025 தொடரின் 26ஆவது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் தொடக்கத்தில் அபாரமாக விளையாடியது. சாய் சுதர்சன் (56), சுப்மன கில் (60) அரைசதம் அடிக்க 12 ஓவரில் 120 ரன்கள் குவித்தது. அதன்பின் மளமளவென விக்கெட் இழக்க இறுதியாக 180 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களம் இறங்கியது. மிட்செல் மார்ஷ் இல்லாததால் மார்கிராம் உடன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களம் இறங்கினார். ரிஷப் பண்ட் 18 பந்தில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார்.

மார்கிராம் உடன் இணைந்து நிக்கோலஸ் பூரன் வாணவேடிக்கை நிகழ்த்தினார். இதனால் லக்னோ 9.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 26 பந்தில் அரைசதம் கடந்த மார்கிராம், 31 பந்தில் 58 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

3ஆவது விக்கெட்டுக்கு நிக்கோலஸ் பூரன் உடன் ஆயஷ் பதோனி ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் 23 பந்தில் 6 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இந்த தொடரில் அவர் விளையாடும் 6ஆவது போட்டி இதுவாகும். இதில் நான்கு அரைசதம் விளாசியுள்ளார்.

தொடர்ந்து விளையாடிய நிக்கோஸ் பூரன் 61 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 15.2 ஓவரில் 155 ரன்கள் எடுத்திருந்தது.

4அவது விக்கெட்டுக்கு ஆயுஷ் பதோனியுடன் மில்லர் ஜோடி சேர்ந்தார். லக்னோவின் ஸ்கோர் 174 ரன்னாக இருக்கும்போது டேவிட் மில்லர் 7 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

5ஆவது விக்கெட்டுக்கு ஆயுஷ் பதோனியுடன் அப்துல் சமாத் ஜோடி சேர்ந்தார். லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆயுஷ் பதோனி 28 ரன்களுடனும், அப்துல் சமாத் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Tags:    

Similar News