ஐ.பி.எல்.(IPL)
null

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ்க்கு 204 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

Published On 2025-04-04 21:21 IST   |   Update On 2025-04-04 21:26:00 IST
  • மிட்செல் மார்ஷ், மார்கிராம் அரைசதம் அடித்தனர்.
  • ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட் வீழ்த்தினார்.

ஐபிஎல் 2025 தொடரின் 16ஆவது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீ்ச்சை தேர்வு செய்தார்.

அதன்படி லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்கிராம் நிதானமாக விளையாட மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்தில் அரைசதம் விளாசினார். 5.3 ஓவருக்குள் அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 31 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 6 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்ட்யா பந்தில் வெளியேறினார். ரிஷப் பண்ட்-ஐ 2 ரன்னில் வெளியேற்றினார்.

மார்கிராம் மெல்லமெல்ல ஆட்டத்தில் வேகத்தை கூட்டி 38 பந்தில் 53 ரன்கள் சேர்த்தார். இவரது விக்கெட்டையும் ஹர்திக் பாண்ட்யாதான் கைப்பற்றினார். ஆயுஷ் படோனி 19 பந்தில் 30 ரன்கள் அடித்தார்.

கடைசி ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். முதல் மூன்று பந்துகளில் 12 ரன்கள் அடித்த டேவிட் மில்லர் 14 பந்தில் 27 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதனால் லக்னோ 19.3 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது.

4ஆவது பந்தில் டேவிட் மில்லரும், 5ஆவது பந்தில் ஆகாஷ் தீப்பும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட் வீழ்த்தினார். கடைசி பந்தில் வைடு உடன் 3 ரன்கள் விட்டுக்கொடுக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 203 ரன்கள் குவித்தது.

Tags:    

Similar News