ஐ.பி.எல்.(IPL)

நானே பொறுப்பு: 2 ரன்னில் தோல்வி குறித்து பேசிய ரியான் பராக்

Published On 2025-04-20 04:57 IST   |   Update On 2025-04-20 04:57:00 IST
  • எனக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவே கடினமாக உள்ளது.
  • 18 முதல் 19-வது ஓவர் வரை ஆட்டம் எங்களிடம் தான் இருந்தது என்றார்.

ஜெய்ப்பூர்:

ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய லக்னோ அணி 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், தோல்விக்குப் பிறகு ரியான் பராக் கூறியதாவது:

எனக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவே கடினமாக உள்ளது. 18 முதல் 19-வது ஓவர் வரை ஆட்டம் எங்களிடம் தான் இருந்தது.

இந்த தோல்விக்கான பணியை நானே ஏற்றுக் கொள்கிறேன். நான் நின்று போட்டியை முடித்துக் கொடுத்திருக்க வேண்டும். எங்களின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே வீசினர்.

பவுலிங்கிலும் கடைசி ஓவர் மட்டும்தான் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. சந்தீப் சர்மாவை நம்பினோம். ஆனால், அவருக்கு இன்றைய நாள் சிறப்பாக அமையவில்லை. 165-170 ரன்களுக்குள் அவர்களை கட்டுப்படுத்தி விடுவோம் என நினைத்தோம்.

கடைசி ஓவர் நாங்கள் நினைத்தபடி செல்லவில்லை என்பதால் அது நடக்கவில்லை. ஐ.பி.எல். தொடரில் சில தவறான பந்துகளை வீசினால் அது ஒட்டுமொத்த போட்டியையுமே பாதிக்கும் என்பதற்கு இது உதாரணம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News