இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு பேட்டிங்கில் நல்ல நிலைக்கு திரும்பியது மகிழ்ச்சி- ரிஷப்பண்ட்
- இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு பேட்டிங்கில் நல்ல நிலைக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது.
- நான் ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
நான் ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்/ I was determined to play a big innings.லக்னோ:
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக (ரூ.27 கோடி ) தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப்பண்ட் தனது மோசமான பேட்டிங்கால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளார். நேற்றைய கடைசி லீக்கில் பெங்களூரு அணிக்கு எதிராக அவர் சதம் அடித்தார். ரிஷப்பண்ட் 61 பந்தில் 118 ரன் (11 பவுண்டரி, 8 சிக்சர்) எடுத்தார்.
ஆனால் அவரது இந்த சதம் பலன் இல்லாமல் போனது. பெங்களூரு அணி 228 ரன் இலக்கை எடுத்து சாதித்தது.
தோல்விக்கு பிறகு லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:-
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு பேட்டிங்கில் நல்ல நிலைக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. சில நாட்களுக்கு ஓய்வு எடுக்க போகிறேன். கிரிக்கெட்டை பற்றி யோசிக்க வேண்டாம். இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வரப்போகிறது. அதற்காக நல்ல மனநிலையில் தயாராகி வருகிறேன்.
பந்து வீச்சாளர்களின் காயம் (மயங்க் யாதவ், மோசின்கான்) குறித்த கவலைகள் இருந்தது. இந்த சீசன் முழுவதும் எங்களுக்கு வலியை ஏற்படுத்தியது.
நான் ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஒவ்வொரு பந்தையும் தீவிரத்துடன் ஆடினேன். இன்னிங்ஸ் முழுவதும் அதே தீவிரத்துடன் விளையாடினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் கொண்ட தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜூன் 20-ந்தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.