ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் தொடரில் இருந்து பிலிப்ஸ் விலகல்: குஜராத் அணியில் இணைந்த இலங்கை வீரர்

Published On 2025-04-18 10:58 IST   |   Update On 2025-04-18 10:58:00 IST
  • நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
  • குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை என்ற ஆவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை 33 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதன் முடிவில் முதல் 4 இடங்களில் டெல்லி, குஜராத், பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் உள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை, சென்னை, ஐதராபாத் ஆகிய அணிகள் பின் தங்கி உள்ளனர்.

இந்நிலையில் குஜராத் அணியில் இடம் பெற்றிருந்த நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இவர் நடப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் தசுன் ஷனகா குஜராத் அணியில் இடம் பிடித்துள்ளார்.



அவர் தனது அடிப்படை விலையான ரூ. 75 லட்சத்திற்கு டைட்டன்ஸ் அணியில் இணைந்துள்ளார். இலங்கைக்காக 102 டி20 போட்டிகளில் ஷனகா விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News