ஐ.பி.எல்.(IPL)

திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுமா?: ஐ.பி.எல். தலைவர் அருண் துமால் பேட்டி

Published On 2025-05-09 02:01 IST   |   Update On 2025-05-09 02:01:00 IST
  • பாதுகாப்பு காரணங்களுக்காக தரம்சாலா போட்டி கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
  • லக்னோவில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

புதுடெல்லி:

ஐ.பி.எல். தொடரின் 58வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

பஞ்சாப் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, லக்னோவில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்பது குறித்து ஐபிஎல் தலைவர் அருண் துமால் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக அருண் துமால் கூறுகையில், தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அரசிடம் இருந்து எந்த வழிகாட்டுதலும் கொடுக்கப்படவில்லை. எனவே, பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News