ஐ.பி.எல்.(IPL)

இது நடந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு

Published On 2025-04-26 04:41 IST   |   Update On 2025-04-26 04:41:00 IST
  • சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
  • இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.

சென்னை:

சேப்பாக்கத்தில் நேற்று நடந்த 43வது லீக் ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட தொடரை விட்டு வெளியேறிய சூழ்நிலை காணப்பட்டாலும், பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு சற்றே இருக்கத்தான் செய்கிறது.

தற்போது புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் நீடிக்கும் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் அதிக வெற்றிகளை பெறவேண்டும். இதனால் இரு அணிகளும் 20 புள்ளிகளைத் தாண்டினால் கீழ் வரிசையில் இருக்கும் அணிக்கு அது சாதகமாக மாறும்.

புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணி அதிக வெற்றியைப் பெறுவதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 புள்ளிகளைப் பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.

பெங்களூரு, மும்பை, பஞ்சாப், லக்னோ அணிகள் வரும் போட்டிகளில் தொடர் தோல்வியை தழுவ வேண்டும். இது நிகழ்ந்தால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிடைக்கும்.

எனவே, சிஎஸ்கே அணி எஞ்சியுள்ள 5 போட்டிகளில் அதிக ரன் ரேட்டில் கண்டிப்பாக வெற்றி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News