null
ஐ.பி.எல். 2025: ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆர்.சி.பி. பந்து வீச்சு தேர்வு
- 28-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அரங்கேறும் 28-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
இதில், தனது முதல் இரு ஆட்டங்களில் ஐதராபாத், கொல்கத்தாவிடம் தோல்வி கண்ட முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணி அடுத்த இரண்டு ஆட்டங்களில் சென்னை, பஞ்சாப்பை பதம் பார்த்தது.
முந்தைய ஆட்டத்தில் குஜராத்திடம் பணிந்தது. அந்த ஆட்டத்தில் 218 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் 159 ரன்னில் அடங்கி 58 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
உள்ளூரில் முதல் ஆட்டத்தில் கால்பதிக்கும் ராஜஸ்தான் வெற்றியை சொந்தமாக்க அதிக ஆர்வம் காட்டும்.
பெங்களூரு அணி முதல் இரு ஆட்டங்களில் கொல்கத்தா, சென்னையை அடுத்தடுத்து தோற்கடித்தது. அடுத்த ஆட்டத்தில் குஜராத்திடம் பணிந்தது. அதற்கு அடுத்தபடியாக மும்பையை வீழ்த்தியது.
கடந்த ஆட்டத்தில் சொந்த மண்ணில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது.
இரு அணிகளும் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இதனால், இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.