சதமடித்ததும் அபிஷேக் சர்மா காட்டிய துண்டுச்சீட்டில் எழுதி இருந்தது இதுதான்
- முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 245 ரன்களைக் குவித்தது.
- தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 247 ரன்கள் எடுத்து வென்றது
ஐதராபாத்:
நடப்பு ஐபிஎல் தொடரின் 27வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 245 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 247 ரன்கள் எடுத்து வென்றது. அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்தார். அத்துடன் அணி வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.
இந்நிலையில், ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா 40 பந்தில் சதமடித்து அசத்தினார். சதமடித்து விட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுகையில் ஒரு துண்டுச்சீட்டை எடுத்து, ரசிகர்களை நோக்கி காட்டினார். அந்தத் துண்டுச்சீட்டில் என்ன எழுதியிருந்தது?
அபிஷேக் சர்மா தனது பாக்கெட்டில் இருந்து காண்பித்த ஒரு துண்டுச்சீட்டில், 'This one is for Orange Army' (ஆரஞ்சு ஆர்மி ரசிகர்களே, இது உங்களுக்காகத்தான்) என எழுதப்பட்டிருந்தது.
தொடர் தோல்வியால் துவண்டிருந்த ரசிகர்களை ஊக்குவிக்கும் விதமாகவே இப்படி எழுதியுள்ளார் என விமர்சகர்கள் தெரிவித்தனர்.