கிரிக்கெட் (Cricket)
null

ஐபிஎல் 2026: அபுதாபியில் டிசம்பர் 16-ந் தேதி மினி ஏலம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published On 2025-11-13 17:48 IST   |   Update On 2025-11-14 10:17:00 IST
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் இந்த ஏலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் தொடர்ந்து 3-வது முறையாக ஏலத்தை வெளிநாட்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தவுள்ளது.

மும்பை:

19-வது ஐ.பி.எல் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 15-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த சீசனுக்கான வீரர்களின் மினி ஏலம் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து தக்க வைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும் நாளை மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐ.பி.எல் வீரர்களின் மினி ஏலம் நடைபெறும் தேதி, இடம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 16-ந்தேதி அபுதாபியில் வீரர்களின் ஏலம் நடைபெற உள்ளது.

ஐ.பி.எல் வீரர்களின் ஏலம் தொடர்ந்து 3-வது முறையாக வெளிநாட்டில் நடக்கிறது. 2024-ம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் துபாயில் நடந்தது. 2025-ம் சீசனுக்கான வீரர்கள் ஏலம் ஜெட்டாவில் நடந்தது.

தக்க வைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும் அளித்தபிறகு ஏலம் விடப்படும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல் நிர்வாகம் தயாரிக்கும்.

Tags:    

Similar News