2019-க்கு பிறகு முதல் தோல்வி.. ஷிவம் துபேவின் 56 வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியா
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- இந்த போட்டியில் ஷிவம் துபே 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும் எல்லீஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 18.4 ஓவரில் 126 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் (1-0) முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் 2019-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய ஆடும் லெவனில் ஷிவம் துபே இருந்து முதல் முறையாக இந்தியா தோல்வியை தழுவியுள்ளது.
2019-ம் ஆண்டில் இருந்து ஷிவம் துபே 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 3 போட்டிகள் முடிவில்லாமல் போனது. 56 போட்டிகள் வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு தோல்வி அடங்கும். துபேவின் தொடர் வெற்றியை ஆஸ்திரேலிய அணி முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.