கிரிக்கெட் (Cricket)

முதல் டி20 போட்டி: ஸ்மிருதி மந்தனா அதிரடி சதத்தால் இந்தியா அபார வெற்றி

Published On 2025-06-29 00:07 IST   |   Update On 2025-06-29 00:07:00 IST
  • இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது.
  • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

நாட்டிங்காம்:

இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதம் கடந்தார். அவர் 62 பந்தில் 3 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 112 ரன்கள் குவித்தார். ஹர்லீன் தியோல் 43 ரன்னும், ஷபாலி வர்மா 20 ரன்னும் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் லாரன் பெல் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தது இங்கிலாந்து.

அந்த அணியின் கேப்டன் நாட் சீவர் பிரண்ட்42 பந்தில் 66 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், இங்கிலாந்து 14.5 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகி விருது ஸ்மிருதி மந்தனாவுக்கு அளிக்கப்பட்டது.

இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா, ராதா யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Tags:    

Similar News