கிரிக்கெட் (Cricket)

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

Published On 2025-11-23 03:51 IST   |   Update On 2025-11-23 03:51:00 IST
  • ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்றது.
  • இதில் ஆஸ்திரேலிய அணி வென்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

துபாய்:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், பெர்த் டெஸ்ட் போட்டி முடிந்ததை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 4-லும் வெற்றி பெற்ற நிலையில் 100 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

நடப்பு சாம்பியன் தென் ஆப்பிரிக்க அணி 66.67 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடர்கிறது.

இலங்கை அணி 3-வது இடத்திலும், இந்திய அணி 4-வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் 5-வது இடத்தில் உள்ளது.

முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இங்கிலாந்து 6-வது இடத்தில் உள்ளது.

கடைசி 3 இடங்களில் முறையே வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன.

Tags:    

Similar News