கிரிக்கெட் (Cricket)
null

டி20- ஒருநாள் அணிக்கான தரவரிசை பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

Published On 2025-05-05 15:47 IST   |   Update On 2025-05-05 15:54:00 IST
  • டெஸ்ட் அணிக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் தொடர்கிறது.
  • டெஸ்ட் அணிக்கான தரவரிசையில் இந்தியா 3-வது இடட்தில் உள்ளது.

ஆடவர் கிரிக்கெட் அணிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான பட்டியலில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. ஒருநாள் அணியின் தரவரிசை பட்டியலில் 124 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் டி20 அணியின் தரவரிசை பட்டியலில் 271 புள்ளிகளுடன் இந்தியா முதல் இடத்திலும் நீடிக்கிறது.

டெஸ்ட் அணிக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் தொடர்கிறது. இதில் இங்கிலாந்து அணி 2 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் ஒரு இடம் பின் தங்கி, 3, 4-வது இடங்களில் உள்ளது.

டி20 தரவரிசையில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இலங்கை அணி 7-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றப்படி பெரிய அளவில் எந்த மாற்றமும் அணிகள் தரவரிசையில் இல்லை.

Tags:    

Similar News