கிரிக்கெட் (Cricket)

சர்ச்சையான சைகை.. ஹாரிஸ் ராஃப் - ஃபர்ஹானுக்கு அபராதத்துடன் எச்சரிக்கை விடுத்த ஐசிசி

Published On 2025-09-26 22:02 IST   |   Update On 2025-09-26 22:02:00 IST
  • ஃபர்ஹான் துப்பாக்கியால் சுடுவது போன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
  • ஹாரிஸ் ராஃப் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது, ஃபர்ஹான் மற்றும் ஹாரிஸ் ராஃப்பின் செயல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

அந்த போட்டியின் போது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் 'தகாத வார்த்தைகளை' பயன்படுத்தியதற்காக அவருக்கு போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் துப்பாக்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த பிறகு ஃபர்ஹான் துப்பாக்கியால் சுடுவது போன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இரண்டாவது இன்னிங்ஸின் ஐந்தாவது ஓவரில் ராஃப், அபிஷேக் சர்மா மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஹாரிஸ் ராஃப் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது அவரது செய்கைக்காக அல்ல. சாஹிப்சாதா ஐசிசியிடம் இருந்து எச்சரிக்கை பெற்றுள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் ஹாரிஸ் ராஃப் தனது விரல்களை உயர்த்தி 0 6 என்று காட்டினார். இது, இந்த ஆண்டு மே மாதம் இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு, எல்லையில் நடந்த நான்கு நாள் மோதலின் போது ஆறு இந்தியப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறும் ஆதாரமற்ற கூற்றுகளைக் குறிப்பதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News