கிரிக்கெட் (Cricket)

ஒவ்வொரு முறையும் மனசு உடையும்- சஞ்சு தேர்வு குறித்து முன்னாள் இந்திய வீரர் வேதனை

Published On 2025-11-25 15:38 IST   |   Update On 2025-11-25 15:38:00 IST
  • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
  • சஞ்சு சாம்சன் என்ன தவறுசெய்தார் என்று எனக்கு புரியவில்லை.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நாளையுடன் முடிய உள்ளது. இதனை தொடர்ந்து இரு அணிகளும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.

இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் வழக்கம் போல சஞ்சு சாம்சன் கழற்றி விடப்பட்டார். மேலும் 2 வருடங்களுக்கு பிறகு ருதுராஜ் அணியில் இடம்பிடித்தார்.

இந்நிலையில் நம்முடைய பெயர் அணியில் இடம்பெறாதா என பார்த்து ஏமாறும்போது ஒவ்வொரு முறையும் மனசு உடையும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்திருக்கிறார். அவருடைய ODI சராசரி 57ஆக இருக்கிறது. ஆனாலும் அவருக்கு இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. அவர் என்ன தவறுசெய்தார் என்று எனக்கு புரியவில்லை.

ரிஷப் பண்ட் அணியில் இருப்பதற்கு கூட என்னால் காரணம் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் துருவ் ஜூரெல் எந்த அடிப்படையில் அணியில் இருக்கிறார் என்பது எனக்கு புரியவில்லை. சஞ்சு சாம்சனின் இடத்தில் நானும் இருந்திருக்கிறேன். நம்முடைய பெயர் அணியில் இடம்பெறாதா என பார்த்து ஏமாறும்போது ஒவ்வொரு முறையும் மனசு உடையும்.

Tags:    

Similar News