null
மேக்ஸ்வெல்லை அடிக்கடி வீழ்த்தும் வருண் சக்கரவர்த்திக்கு ஸ்ரீகாந்த் பாராட்டு
- வருண் சக்கரவர்த்தி பந்து வீச வரும்போதெல்லாம், கிளென் மேக்ஸ்வெல்லின் கால்கள் நடுங்குகின்றன.
- குறிப்பிட்ட பேட்டர்களை முயல் போல் பிடிக்கிறார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. இந்திய வீரர்கள் சிறப்பாக பந்து வீச, ஆஸ்திரேலியா 119 ரன்களில் சுருண்டு 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் மேக்ஸ்வெல் வருண் சக்ரவர்த்தி பந்தில் க்ளீன் போல்டாகியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் வருண் சக்கரவர்த்தி பந்தை 33 முறை எதிர்கொண்டுள்ளார். இதில் 5 முறை அவுட்டாகியுள்ளார்.
மேக்ஸ்வெல்லை அடிக்கடி அவுட்டாக்கி வரும் வருண் சக்கரவர்த்தியை முன்னாள் வீரரும், இந்திய அணியின் தேர்வாளருமான ஸ்ரீகாந்த் பாராட்டிள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீகாந்தி கூறியதாவது:-
வருண் சக்கரவர்த்தி பந்து வீச வரும்போதெல்லாம், கிளென் மேக்ஸ்வெல்லின் கால்கள் நடுங்குகின்றன. குறிப்பிட்ட பேட்டர்களை முயல் போல் பிடிக்கிறார் (அவுட்டாக்குகிறார்), குறிப்பாக மேக்ஸ்வெல்லை பார்க்கும்போது, அவர் கேக் துண்டை லபக் என்று விழுங்குவபோல், உடனடியாக அவுட்டாக்குகிறார்.
இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.