இங்கிலாந்து தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாதது ஏன்? காட்டமாக பதில் அளித்த கம்பீர்
- நடப்பு ஆண்டு பஞ்சாப் அணியை இறுதிப் போட்டி வரை தன்னுடைய தலைமையில் ஷ்ரேயாஸ் அழைத்துச் சென்றுள்ளார்.
- கடந்த ஆண்டு ஷ்ரேயாஸ் தலைமையில் கேகேஆர் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது.
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இளம் இந்திய அணிக்குக் கேப்டனாக சுப்மன் கில்லும், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை.
கடந்த ஆண்டு அவர் தலைமையில் கேகேஆர் அணி ஐபிஎல் கோப்பையை வென்ற நிலையில் அதன் பிறகு தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
நடப்பு ஆண்டு பஞ்சாப் அணியை இறுதிப் போட்டி வரை தன்னுடைய தலைமையில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனாலும் அவர் அணியில் எடுக்கவில்லை என்பதை விட ஓரம்கட்டப்பட்டுள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்திய அணியில் ஏன் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறவில்லை என்ற கேள்விக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் "நான் தேர்வுக்குழுவின் தலைவர் இல்லை" எனக் கூறியுள்ளார். கம்பீரின் இந்த பதில் பொறுப்பற்றத் தனமாகவும் திமிர்த்தனத்துடனும் இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.