கிரிக்கெட் (Cricket)

விஜய் ஹசாரே டிராபி: ரோகித், கோலி, சூர்யவன்ஷி உள்பட ஒரே நாளில் சதமடித்த 22 வீரர்கள்

Published On 2025-12-25 03:03 IST   |   Update On 2025-12-25 03:07:00 IST
  • ஒடிசா அணியின் ஸ்வஸ்திக் சமல் இரட்டை சதமடித்து 202 ரன்கள் எடுத்தார்.
  • பீகார் அணியின் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி 190 ரன் எடுத்து இரட்டை சதத்தை தவறவிட்டார்.

புதுடெல்லி:

இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் நேற்று தொடங்கியது. இந்தத் தொடர் ஜனவரி 18-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.

நேற்று நடந்த பல்வேறு போட்டிகளில் நட்சத்திர வீரர்கள் உள்பட இளம் வீரர்களும் சதமடித்து அசத்தியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 22 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

பீகார் அணியின் சூர்யவன்ஷி 190 ரன்னும், சகிபுல் கனி 128 ரன்னும், ஆயுஷ் லோஹருகா 116 ரன்னும் அடித்தனர்.

ஒடிசா அணியின் ஸ்வஸ்திக் சமல் 202 ரன்னும், பிப்லாப் சமந்த்ரே 100 ரன்னும் எடுத்தனர்.

விதர்பா அணியின் துருவ் ஷோரே 136 ரன்னும், அமன் மோகடே 110 ரன்னும் எடுத்தனர்.

மேகாலயா அணியின் கிஷான் லிங்டோ 106 ரன்னும், அர்பித் படேவரா 104 ரன்னும் அடித்தனர்.

மும்பை அணியின் ரோகித் சர்மா 155 ரன்னும், கர்நாடகா அணியின் தேவ்தத் படிக்கல் 147 ரன்னும், சவுராஷ்டிரா அணியின் சம்மார் கஜ்ஜார் 132 ரன்னும் எடுத்தனர்.

டெல்லி அணியின் விராட் கோலி 131 ரன்னும், ஜம்மு காஷ்மீர் அணியின் ஷுபம் கஜுரியா 129 ரன்னும், அரியானா அணியின் ஹிமான்ஷு ரானா 126 ரன்னும் அடித்தனர்.

ஜார்க்கண்ட் அணியின் இஷான் கிஷன் 125 ரன்னும், ஆந்திரா அணியின் ரிக்கி புய் 122 ரன்னும் எடுத்தனர்.

ரயில்வேஸ் அணியின் ரவி சிங் 109 ரன்னும், கோவா அணியின் ஸ்நேஹல் கவுதன்கர் 107 ரன்னும், மத்திய பிரதேச அணியின் யாஷ் துபே 103 ரன்னும், கேரளா அணியின் விஷ்ணு வினோத் 102 ரன்னும், மணிப்பூர் அணியின் ஜோடின் பெய்ரோஜியாம் 101 ரன்னும் அடித்தனர்.

Tags:    

Similar News