கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்தில் வரலாற்று சாதனைப் படைத்த ரிஷப் பண்ட்..!

Published On 2025-06-23 20:10 IST   |   Update On 2025-06-23 20:10:00 IST
  • விக்கெட் கீப்பர் ஆண்டி பிளவர் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்துள்ளார்.
  • இங்கிலாந்து மண்ணில் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசிய ஒரே இந்தியர் ரிஷப் பண்ட் மட்டுமே.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லீட்சில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் விளாசினர். 2ஆவது இன்னிங்சில் கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் விளாசினர்.

இதன்மூலம் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசிய 2ஆவது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். முன்னதாக ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர் ஆண்டி பிளவர் 2001-ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் 142 ரன்களும், 2ஆவது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 199 ரன்களும் விளாசியிருந்தார்.

தற்போது ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் 134 ரன்களும், 2ஆவது இன்னிங்சில் 118 ரன்களும் விளாசியுள்ளார்.

மேலும், இங்கிலாந்து மண்ணில் இரண்டு இன்னிங்சில் சதம் விளாசிய ஒரே இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர் (3), ராகுல் டிராவிட் (2), விராட் கோலி, ரகானே, ரோகித் சர்மா ஆகியோர் இதற்கு முன்னதாக இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசிய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆவார்கள்.

Tags:    

Similar News