வீடியோ: பயிற்சியின் போது காயம்.. சக வீரர்களிடம் சிரித்தபடி இடுப்பை காட்டிய கருண் நாயர்
- இங்கிலாந்து- இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
- பயிற்சியின் போது பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில் கருண் நாயருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது.
லீட்ஸ்:
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் லீட்சில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் நாளை ( 20-ந்தேதி ) தொடங்குகிறது.
விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோரின் ஓய்வுக்கு பிறகு இந்தியா விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இளம் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த போட்டிக்காக லீட்சில் மைதானத்தில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி ஈடுப்பட்டு வந்தனர். இந்த நிலையில் பயிற்சியின் போது கருண் நாயருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தை எதிர் கொண்ட போது பந்து கருண் நாயரின் இடுப்பை தாக்கியது.
இதனால் கருண் நாயர் வலியால் துடித்தார். பிறகு ஒன்று இல்லை என்பது போல மீண்டும் பேட்டிங் செய்தார். பிறகு பேட்டிங்கை முடித்து விட்டு இடுப்பை தடவி கொண்டே வெளியே வந்தார். டிசர்ட்டை எடுத்து பார்த்த போது இடுப்பில் பந்து தடம் அப்படியே பதிந்திருந்தது. அதனை சக வீரர்களிடம் சிரித்தபடி இதோ பார்த்துக்கோ என்பது போல காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கருண் நாயர் கண்டிப்பாக ஆடும் லெவனில் இருப்பார் என எதிர்பார்க்கபடும் நிலையில் இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது பெரிதும் பாதிப்பு இருக்காது என கூறப்படுகிறது.