வீரர்களுக்கும் பயிற்சியாளருக்கும் இடையிலான விவாதம் டிரஸ்ஸிங் ரூமிலேயே இருக்க வேண்டும்: கவுதம் கம்பீர்
- நேர்மையானவர்கள் டிரஸ்ஸிங் ரூமில் இருக்கும் வரை இந்திய கிரிக்கெட் பாதுகாப்பான கைகளில் இருக்கும்.
- தொடரில் நாம் எப்படி விளையாட முடியும் என்பதை பற்றி மட்டுமே விவாதங்கள் இருக்கும்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 4 போட்டிகளில் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.
மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்த காரணத்தால் வீரர்கள் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வீரர்கள் அறையில் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் வீரர்களை கடுமையாக கடிந்து கொண்டார் எனவும், சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் இருந்து தூக்கிவிடுவேன் என மிரட்டியதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் நாளை சிட்னி டெஸ்ட் தொடங்க இருக்கும் நிலையில் கவுதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* பயிற்சியாளருக்கும் வீரருக்கும் இடையிலான விவாதங்கள் டிரஸ்ஸிங் ரூமிலேயே இருக்க வேண்டும்:
* முதுகு வலி காரணமாக கடைசி டெஸ்டில் (சிட்னி டெஸ்ட்) இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் விலகியுள்ளார்
* நேர்மையானவர்கள் டிரஸ்ஸிங் ரூமில் இருக்கும் வரை இந்திய கிரிக்கெட் பாதுகாப்பான கைகளில் இருக்கும். உங்களை அங்கேயே வைத்திருக்கும் ஒரே விஷயம் செயல்திறன் மட்டுமே.
* தொடரில் நாம் எப்படி விளையாட முடியும் என்பதை பற்றி மட்டுமே விவாதங்கள் இருக்கும்.
* அணிக்குதான் முதலில் முன்னுரிமை. வீரர்கள் அவர்களுடைய இயல்பான விளையாட்டை விளையாட முடியும், ஆனால் அணி விளையாட்டுகளில், தனிநபர் மட்டுமே பங்களிக்க முடியும்.
* பார்டர்- கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துக் கொள்வதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது.