சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் 0-3 என தோல்வியடைந்ததை ஒருபோதும் மறக்க முடியாது: கவுதம் கம்பிர்
- எனது பயிற்சி காலத்தில் அதை ஒருபோதும் மறக்க முடியாது .
- அதை நான் மறந்துவிடக் கூடாது. இதை நான் வீரர்களிடமும் சொல்லியிருக்கிறேன்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பிர், நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 எனத் தொடரை இழந்ததை ஒருபோதும் மறக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
12 வருடத்திற்குப் பிறகு சொந்த மண்ணில் இந்தியா படுதோல்வி அடைந்தது. கம்பிர் தலைமையில் இந்தியா விளையாடிய முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.
இது தொடர்பாக கவுதம் கம்பிர் கூறியதாவது:-
நான் நேர்மையாகவும் மனதாரவும் பேச வேண்டுமென்றால், எனது பயிற்சி காலத்தில் அதை ஒருபோதும் மறக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். அதை நான் மறந்துவிடக் கூடாது. இதை நான் வீரர்களிடமும் சொல்லியிருக்கிறேன். முன்னோனக்கி செல்வதற்கு இது முக்கியம், அதேவேளையில் சில சமயங்களில் கடந்த காலத்தையும் நினைவில் கொள்வது முக்கியம்.
எல்லோரும் நியூசிலாந்தை வீழ்த்துவோம் என்று நினைத்தார்கள். அந்த டிரஸ்ஸிங் அறையில், நியூசிலாந்து நம்மை தோற்கடித்தது என்பதை தொடர்ந்து நினைவூட்ட வேண்டும்.
இவ்வாறு கம்பிர் தெரிவித்துள்ளார்.