கிரிக்கெட் (Cricket)

ஆஸி.வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு- வருத்தம் தெரிவித்த பிசிசிஐ

Published On 2025-10-25 21:20 IST   |   Update On 2025-10-25 21:20:00 IST
  • இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு.
  • ஆஸி. கிரிக்கெட் அணி உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தூருக்கு வந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை கஃபேவுக்கு செல்ல வெளியே வந்தபோது, இரு ஆஸ்திரேலிய வீராங்கனைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர்.

இதில் ஆஸி. கிரிக்கெட் அணி உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,"ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் மிகவும் வருத்ததை ஏற்படுத்தியது. இந்தியா தனது விருந்தினர்களிடம் காட்டும் அக்கறை, அரவணைப்புக்கு பெயர் பெற்றது.

இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை |விரைவாக கைது செய்த மத்திய பிரதேச போலீசாரை பாராட்டுகிறோம். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுப்போம்" என்றார்.

Tags:    

Similar News