கிரிக்கெட் (Cricket)
null

இலங்கை மிரட்டல் பந்து வீச்சு: 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் திணறல்

Published On 2025-09-13 20:56 IST   |   Update On 2025-09-13 20:56:00 IST
  • டான்சித் ஹசன், பர்வேஸ் ஆகியோர் ரன்கள் ஏதும் எடுக்கவில்லை.
  • டோஹித் ஹிரிடோய் 8 ரன்களும் மஹேதி ஹசன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அபுதாபி:

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

இதில் அபுதாபியில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள வங்காளதேசம் - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

அதன்படி வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக டான்சித் ஹசன் தமீம் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமோன் ஆகியோர் களமிறங்கினர்.

முதல் 5 பந்துகளை டாட் செய்த டான்சித் ஹசன் (0) 6-வது பந்தில் அவுட் ஆனார். அடுத்த ஓவரில் பர்வேஸ் (0) 3 பந்துகளை டாட் செய்து 4-வது பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த டோஹித் ஹிரிடோய் (8) தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார்.

பவர் பிளேயில் வங்கதேசம் அணி 30 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனை தொடர்ந்து மஹேதி ஹசன் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனால் வங்கதேசம் அணி 38 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

Tags:    

Similar News