கிரிக்கெட் (Cricket)
null

வீடியோ: பேர்ஸ்டோ என்றதும் மனதில் தோன்றிய முதல் வார்த்தை- கலாய்த்த ஆஸி. வீரர்கள்.. என்னவா இருக்கும்?

Published On 2025-11-18 16:16 IST   |   Update On 2025-11-18 16:29:00 IST
  • ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது.
  • இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடர் நடைபெறும் பட்சத்தில் அங்கு சுற்றுப்பயணம் வரும் நாட்டில் விளையாடும் வீரர்கள் குறித்து கேள்வி எழுப்பி விளையாடுவதை வழக்காமாக ஆஸ்திரேலிய அணி கொண்டுள்ளது. சமீபத்தில் இந்திய வீரர்கள் குறித்து கூட அவர்கள் கலாய்த்துள்ளனர்.

அந்த வகையில் ஆஷஸ் தொடருக்கு விளையாட வந்துள்ள இங்கிலாந்து வீரர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பென் ஸ்டோக்ஸை பெருமையாக கூறிய ஆஸி வீரர்கள், பேர்ஸ்டோ பெயரை சொன்னதும் சிரித்துக் கொண்டே பதில் அளித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பென் ஸ்டோக்ஸ் குறித்த கேள்விக்கு, பேட் கம்மின்ஸ் பிளேயர் என கூறினார். அவரை தொடர்ந்து சாம் கான்ஸ்டாஸ் சூப்பர் ஸ்டார் எனவும் கிரீன் தலைவர் எனவும் ஹேசில்வுட் ஆல் ரவுண்டர் எனவும் கவாஜா கேப்டன் எனவும், மேக்ஸ்வெல் கிளட்ச் எனவும் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து பேர்ஸ்டோ குறித்த கேள்விக்கு, பேட் கம்மின்ஸ் கீப்பர் என கூறினார். அவரை தொடர்ந்து சாம் கான்ஸ்டாஸ் அட்டக்கிங் எனவும் கிரீன் சிரித்து கொண்டே ரன் அவுட் எனவும் ஹேசில்வுட் சிவப்பு முடி எனவும் கவாஜா ஸ்டெம்பிங் எனவும், மேக்ஸ்வெல் ஸ்டாங் எனவும் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பேட்ஸ்டோ தேவையில்லாமல் கிரிஸ் விட்டு வெளியேறும் போது கீப்பர் அவரை அவுட் செய்து விடுவார். அதை வைத்து ஆஸ்திரேலிய வீரர்கள் கலாய்த்துள்ளனர்.

Tags:    

Similar News