கிரிக்கெட் (Cricket)

பலே ஆளு யா நீ!.. ரோகித் சர்மாவை புகழ்ந்த நடிகை வித்யா பாலன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

Published On 2025-01-05 21:46 IST   |   Update On 2025-01-05 21:46:00 IST
  • இதுவும் ரோகித் தரப்பு நடிகைக்கு காசு கொடுத்து பதிவிட வைத்த PR போஸ்ட் தான் என நெட்டிசென்கள் கலாய்க்கத் தொடங்கினர்.
  • இன்னும் சில வடஇந்திய நடிகர் நடிகைகள் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக போஸ்ட் செய்துள்ளனர்.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியில் இருந்து ரோகித் சர்மா தற்காலிகமாக விலகி உள்ளார். அவரது முடிவுக்கு ஆதரவாக இணையத்தில் நிறைய போஸ்ட்கள் வளம் வருகின்றன.

ஆனால் அவற்றில் பெரும்பாலானவை ரோகித் சர்மா தரப்பு காசு கொடுத்து வெளியிடும் PR [PULBIC RELATIONS] போஸ்ட்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ரோகித் சர்மாவின் முடிவை ஆதரிக்கும் விதமான வாட்சப் பார்வேர்ட் போஸ்ட் ஒன்றை பிரபல இந்தி நடிகை வித்யா பாலன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

எனவே இதுவும் ரோகித் தரப்பு நடிகைக்கு காசு கொடுத்து பதிவிட வைத்த PR போஸ்ட் தான் என நெட்டிசென்கள் கலாய்க்கத் தொடங்கினர்.

மேலும் வித்யா பாலன் எக்ஸ் பக்கத்திலும் அதுபோன்ற போஸ்ட் காணப்பட்டது. ஆனால் வித்யா பாலனின் எக்ஸ் ஐடி ரோகித் சர்மாவை பின்தொடர கூட இல்லை.

இன்னும் சில வடஇந்திய நடிகர் நடிகைகள் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக போஸ்ட் செய்துள்ளனர்.ஆனால் அவர்களும் கூட ரோகித் சர்மாவை பின்தொடரவில்லை. எனவே PR போஸ்களை முன்வைத்து ரோகித் சர்மாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் வித்யா பாலனை ரோகித் சர்மா PR குழு தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவர் மீதான அபிமானத்தால்தான் வித்யா போஸ்ட் போட்டார் என்றும் அவரது தரப்பு தற்போது விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது.

Tags:    

Similar News