கிரிக்கெட் (Cricket)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

Published On 2025-11-02 13:20 IST   |   Update On 2025-11-02 13:20:00 IST
  • முதல் 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் (கான்பெரா) மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
  • 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.

5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் (கான்பெரா) மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது 20 ஓவர் ஆட்டம் ஹோபர்ட்டில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

2 ஆவது போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News